அஜித்குமாரின் தம்பி நவீனுக்கு திடீர் உடல்நலக்குறைவு | Ajithkumar Lockup Death | Naveen | TN Police|
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணையில் இருந்தபோது மரணம் அடைந்தார். தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் இறந்தது வீடியோ ஆதாரத்துடன் உறுதியாகி மாநிலத்தையே உலுக்கியது. அஜித்குமாரை விசாரித்தபோது, அவரது தம்பி நவீன்குமாரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நவீன்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். போலீசார் தாக்கியதில் காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறி அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்து ரத்தக்கட்டு, விரல் வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.