உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரேவந்த் ரெட்டி தூண்டினாரா? தெலங்கானாவில் மாறி மாறி புகார் Actor Allu Arjun house attacked 6 students

ரேவந்த் ரெட்டி தூண்டினாரா? தெலங்கானாவில் மாறி மாறி புகார் Actor Allu Arjun house attacked 6 students

ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 பட சிறப்பு காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் பலியானதும், அவரது மகன் கோமாவில் மருத்துவமனையில் இருப்பதும் தெலங்கானாவில் அரசியல் பிரச்னையாகவே மாறி உள்ளது. அல்லு அர்ஜுன்தான் நெரிசலுக்கு காரணம்; தியேட்டருக்கு அவர் திடீரென வராமல் இருந்திருந்தால் ஒரு குடும்பம் சிதைந்து போயிருக்காது; தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம் என முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையிலேயே கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளிவந்தார். இது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து; இதை வைத்து என் மீது அரசியல்வாதிகள் சேற்றை வாரி இறைக்கிறார்கள் என அல்லு அர்ஜுன் வேதனை தெரிவித்திருந்தார்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !