முஸ்லிம்களுக்கு எதிரானதா? அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் பதற்றம் | Amaran movie | SDPI protest
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அமரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான அமரன் படத்தை ரெட் ஜியான்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு எஸ்டிபிஐ கட்சி திடீரென எதிர்ப்பு தெரிவித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக திரைப்பட காட்சிகள் இருப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல இடங்களில் அமரன் படம் ஓடும் தியேட்டர்களை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டனர். சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தியேட்டரையும் முற்றுகையிட்டனர். படக்குழுவினருக்கு எதிராகவும், படத்தை தடை செய்யக்கோரியும் கோஷம் போட்டனர்.