அமர்நாத் யாத்திரை செல்வோர் முன்பதிவு 10% குறைந்தது Amarnath yatra |Registrations dropped|pahalgam a
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 9ல் முடிகிறது. புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன என்று ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, முன்பதிவு 10 சதவீதம் குறைந்துள்ளது. அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புனித யாத்திரை வரும் பக்தர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக முன்பதிவுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. பஹல்காம் தாக்குதலானது அமர்நாத் யாத்திரையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த காஷ்மீர் சுற்றுலா தலங்களையும் பாதித்து இருக்கிறது. யாத்திரை முகாம்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் விரிவான பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு காரணத்தால் இந்தாண்டு ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 8 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துவதால் பெரிய பாதிப்பு இருக்காது என கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.