/ தினமலர் டிவி
/ பொது
/ சினிமா கிளைமாக்சை விஞ்சிய ஆம்புலன்ஸ் சேஸிங்; பரபரப்பு | Ambulance | Tollgate
சினிமா கிளைமாக்சை விஞ்சிய ஆம்புலன்ஸ் சேஸிங்; பரபரப்பு | Ambulance | Tollgate
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஹயாத்நகரில் 108 ஆம்புலன்சை நிறுத்திவிட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்குள் சென்று திரும்பி வருவதற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி ஓட்டி சென்றார். உடனே போலீசுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சை டிராக் செய்த போலீசார் அது செல்லும் வழியில் உள்ள போலீசாரை அலர்ட் செய்தனர். மற்றொரு டீம் ஆம்புலன்சை பாலோ செய்து சென்றது. சிட்யாலா என்ற இடத்தில் எஸ்.ஐ ஜான் ரெட்டி ஆம்புலன்சை நிறுத்த முயன்றார். ஆனால், அவரை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. காயமடைந்த எஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டிச 07, 2024