காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விளாசிய அமித் ஷா Amit Sha | waqf amendment bill |Lok Sabh
வக்பு திருத்த மசோதாவை பார்லிமென்ட் விவாகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதங்களில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும், ஆளும் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: வக்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து விவாதங்களை கவனித்து வருகிறேன். இந்தசபையில் பல உறுப்பினர்களுக்கு மசோதா குறித்து தவறான கருத்துகள் இருப்பது தெரிகிறது. சிலருக்கு உண்மை தெரியவில்லை. சிலர் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். அதை நாடு முழுவதும் பரப்ப முயற்சிகள் செய்கின்றனர். இந்த சபை மூலம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட இருக்க மாட்டார். இந்த சட்டத்தில் அதற்கான விதிகள் ஏதும் இல்லை.