கார் வெடிப்பு சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு amit shah at blast spot| red fort car blast|
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்த இடத்தில் தேசிய பாதுகாப்பு படையினர், தடயவியல் நிபுணர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்தை பார்வையிட்டார். முன்னதாக, கார் வெடிப்பில் காயமடைந்து டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனை டாக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமித் ஷா பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, கார் வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. விரைவில் அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம். சம்பவம் நடந்த உடனே பிரதமர் மோடி அழைத்து பேசினார். முதற்கட்ட தகவல்களை அவரிடம் கூறினேன் என்றார். டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. வெடிப்பு சம்பவத்துக்கு என்ன காரணம் என்பதை உடனே சொல்வது கடினம். சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் பகுப்பாய்வு செய்து சொல்லும் வரை வெடிப்புக்கான காரணம் பற்றி சொல்வது கஷ்டம் என அமித்ஷா கூறினார். #BlastNearRedFort #RedFortMetroStation #AmitShah #UnionHomeMinister #DelhiBlast #EmergencyResponse #PublicSafety #PoliceInvestigation #IndiaCrisis #BreakingNews #MetroStationSafety #NationalSecurity #TerrorIncident #DelhiNews #LiveUpdate #PoliticalResponse #CivicAlert