தமிழர்களுக்கே துரோகம்; திமுகவை கிழித்த அமித் ஷா amit shah| dmk| mk stalin| bjp
டெல்லியில் தனியார் டிவி நிகழ்ச்சியில் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியல் தொடர்பாக பேசினார். அதன் விபரம்; ஒரு காலத்தில் தமிழகம் தென்னிந்தியாவில் முற்போக்கான மாநிலமாக கருதப்பட்டது. ஆனால், திமுக அரசின் தவறான கொள்கைகளால் தடுமாறி குழப்பமான நிலையில் உள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு, ஊழல் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த மாநில இளைஞர்கள் வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். தொழில் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறுகின்றன. மகன் உதயநிதியை முன்றுத்துவதன் மூலம், வாரிசு அரசியலை ஸ்டாலின் வளர்க்கிறார். திமுக ஆட்சியின் மீது, தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதிமுக -பாஜ கூட்டணி தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம். பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்று திமுகவிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.