உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமித்ஷா கூட்டத்தில் பகீர்! ட்ரோனை சுட்டுத்தள்ளிய வீரர்கள் Amit Shah karaikal visit drone shotdown

அமித்ஷா கூட்டத்தில் பகீர்! ட்ரோனை சுட்டுத்தள்ளிய வீரர்கள் Amit Shah karaikal visit drone shotdown

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் தடையை மீறி பறந்த ட்ரோனை பாதுகாப்பு வீரர்கள் சுட்டுத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரைக்காலில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினமே தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், தடையை மீறி ட்ரோன் ஒன்று பறந்தது. தொடர்ந்து அமித்ஷா பேசும் மேடை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #AmitShah #KaraikalVisit #DroneShotdown #IndianPolitics #PoliticalVisit #AmitShahInKaraikal #DroneFootage #Karaikal #EventCoverage #SatelliteView #SecurityUpdate #AmitShahSpeech #PublicAddress #DroneSurveillance #KaraikalHighlights #GovernmentOfIndia #PoliticalUpdates #AreaSafety #DroneNews #LiveEvent

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி