உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திரா முன் அமித்ஷா ஒரு குழந்தை என கார்கே பதிலடி Amitsha | Maha Elections Campaign | Rahul | Indira

இந்திரா முன் அமித்ஷா ஒரு குழந்தை என கார்கே பதிலடி Amitsha | Maha Elections Campaign | Rahul | Indira

நாடு விடுதலைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததால் அதற்கு அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370-இன் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், 2019 ஆகஸ்ட் 5ல் மத்திய அரசால் அந்த 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. மீண்டும் மாநில அந்தஸ்து தேவை என ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் தனி தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவு 370--ஐ மீண்டும் கொண்டுவருவோம் என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. காங்கிரசின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில்Jalgaon நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பதில் அளித்து பேசினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவோம் என காங்கிரஸ் சொல்கிறது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை