உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய திட்டம்amstrong| BSP| amstrong crime case

மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய திட்டம்amstrong| BSP| amstrong crime case

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்க அவரது ஆதரவாளர்கள், ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மைதுனர் அருள், அவருடன் வாழ்ந்த அஞ்சலை என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். கடைசியாக கைதானவர்கள் கோடம்பாக்கம் பூபதி, காமராஜர் நகரை சேர்ந்த சகோதரர்கள் விஜயகுமார், விக்னேஷ். ஆம்ஸ்ட்ராங் கொலை சதியில் வெடிகுண்டு வீசும் திட்டமும் இருந்தது. அதற்காக ரவுடி சம்பவ செந்திலின் கூட்டாளி ராஜேஷிடம் இருந்த வெடிகுண்டுகளை இவர்கள் 3 பேரும் வக்கீல் மலர்கொடிக்கு கைமாற்றி விட்டுள்ளனர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி