உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு Amstrong| BSP| Mayawathi| amstrong case

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு Amstrong| BSP| Mayawathi| amstrong case

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் நேற்றிரவு ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக, புளியந்தோப்பை சேர்ந்த கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் எண்ணிக்கை 11 ஆனது. ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கட்சியினர் விரும்புகின்றனர். இதற்கு மாநகராட்சி அனுமதி தரவில்லை எனத்தெரிகிறது. இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் அனுமதித்தது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை