திருவள்ளூர் பொத்தூரில் அடக்கம் செய்ய ஏற்பாடு Amstrong| BSP| mayawathi
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அவரது மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் முறையிட்டார். குடியிருப்பு பகுதி, இட நெருக்கடியை காரணம் காட்டி நீதிபதி பவானி சுப்பராயன் மறுத்தார். மாறாக, திருவள்ளூர் செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள அவரது உறவினர் இடத்தில் அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். பொற்கொடியும் அதை ஏற்றுக்கொண்டார். ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய பொத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. பெரம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஜூலை 07, 2024