ஒரு மாதமாக ஆட்டம் காட்டிய சிறுத்தை பிடிபட்டது |Anaimalai Forest |Pollachi | leopard caught
பொள்ளாச்சி ஆனைமலை அருகே வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்தது. பாறைமேடு, பாசிப்பைத்தான் பாறை, கிராமங்களில் சென்ற 25ம் தேதி முதல் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 3 இரும்பு கூண்டுகள் மற்றும் 7 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். 25 நாட்கள் மேல் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி இரண்டு கன்று குட்டிகளையும் கொன்றது. கிராம மக்கள், விவசாயிகள் பீதியடைந்தனர். இந்த சூழலில் இன்று காலை ஒடைய குளம் பகுதியில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. வன கால்நடை மருத்துவ அலுவலர் பரிசோதனைக்கு பின் உலாந்தி வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.