உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பலாத்காரம் செய்து தீர்த்து கட்டிய கொடுமை | Andhra pradesh | minor girl | Accused escaped

பலாத்காரம் செய்து தீர்த்து கட்டிய கொடுமை | Andhra pradesh | minor girl | Accused escaped

ஒருதலை காதலை ஏற்காத சிறுமியை சிதைத்த கொடூரன் ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டம் ராம்பில்லி மண்டலம் கொப்பு குண்டுபாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடரமணன். இவரும் மனைவி வரலட்சுமியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர்களின் 14 வயது மகள் ராம்பில்லி ஜில்லா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 26 வயது பொடாபத்துலா சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பள்ளி செல்லும்போதும் வரும்போதும் காதலிக்குபடி தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததால் போலீசார் சுரேஷை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த சுரேஷ், நேற்று மாலை சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே நுழைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அந்த நேரம் பார்த்து, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பேத்தியை பார்க்க பாட்டி காந்தம்மா வந்துள்ளார். சிறுமியை கொலை செய்துவிட்டு கதவை திறந்து வெளியே வந்த சுரேஷ், காந்தம்மாவை தள்ளிவிட்டு தப்பி சென்றார். உள்ளே சென்று பார்த்த காந்தம்மா, பேத்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி