உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடைசியில் தெரிந்த உண்மை ஆந்திராவில் ஷாக் சம்பவம் | Government bus Theft | Andhra Police

கடைசியில் தெரிந்த உண்மை ஆந்திராவில் ஷாக் சம்பவம் | Government bus Theft | Andhra Police

ஆந்திரா நெல்லூர் ஆத்மகூர் டிப்போவைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜீலானி. நேற்று இரவு பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்ஸை நிறுத்தி தூங்க சென்றார். அதிகாலை நெல்லூரில் இருந்து ஆத்மகூர் நோக்கி புறப்பட வேண்டியிருந்தது. 3 மணி அளவில் பாத்ரூம் சென்று திரும்பிய டிரைவர் ஷாக் ஆனார். நிப்பாட்டி இருந்த இடத்தில் பஸ் இல்லை. உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆர்டிசி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். வாக்கி-டாக்கி மூலம் நெல்லூர் முழுதும் உஷார் படுத்தினர். ஜிபிஎஸ் மூலம் பஸ் எங்கு செல்கிறது என்பதையும் கண்டுபிடித்தனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !