உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பறிபோனது 8 பேரின் உயிர்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பறிபோனது 8 பேரின் உயிர்

ஆந்திராவின், அனகாபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினத்தில் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்படுகிறது. ராக்கெட் பட்டாசுகள் தயாரிப்பதற்கு பிரபலமானது. ஆலையில் 32 தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிமருந்து, பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆலை கட்டடங்கள் தரைமட்டம் ஆகின. இடிபாடுகளுக்கிடையே ஆங்காங்கே தொழிலாளர்கள் உடல்கள் கிடந்தன. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் உடல் கருகி இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு ஆலை விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ