உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல கிராமங்கள் தத்தளிப்பு: தெலங்கானாவில் ரெட் அலர்ட் Andra | Telangana | Heavy Rain | 9 Dead

பல கிராமங்கள் தத்தளிப்பு: தெலங்கானாவில் ரெட் அலர்ட் Andra | Telangana | Heavy Rain | 9 Dead

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கன மழை தொடர்ந்தது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகள், கார்கள் நீரில் மூழ்கின. இடைவிடாத மழையால் இரண்டு மாநிலங்களிலும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் விஜயவாடா மண்டலத்தில் உள்ள அம்பாபுரம், நைனாவரம், நுன்னா, பதாபடு கிராமங்கள் நீரில் முழுவதும் மூழ்கிவிட்டன. ஆந்திராவில் மழையால் 8 பேர் இறந்துள்ளனர். விஜயவாடாவின் மொகல்ராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் மேலும் 3 பேர் இறந்தனர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ