உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய அங்கன்வாடி மைய கட்டட கூரை பெயர்ந்து விழுந்ததால் சர்ச்சை | Anganwadi building | Sengam

புதிய அங்கன்வாடி மைய கட்டட கூரை பெயர்ந்து விழுந்ததால் சர்ச்சை | Anganwadi building | Sengam

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் கிராமம். இங்கு 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகஸ்ட் 28ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த அங்காடி மையத்தில் 30 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், நேற்று திடீரென கட்டிடத்தின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டடம் கட்டி, முழுதாக 3 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக கூரை பெயர்ந்து விழுந்துள்ளதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கல்வித்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை