உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனடா அமைச்சராக பதவியேற்ற அனிதா ஆனந்த்க்கு பாராட்டுகள் குவிகிறது! Anita Anand | Canada

கனடா அமைச்சராக பதவியேற்ற அனிதா ஆனந்த்க்கு பாராட்டுகள் குவிகிறது! Anita Anand | Canada

கனடாவின் ஓக்வில் கிழக்கு தொகுதி எம்.பி. அனிதா ஆனந்த், அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக பதவி ஏற்றார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்து பெண் கனடாவின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்பது இதுவே முதல் முறை. இதனால் அவருக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அனிதா ஆனந்த் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவி ஏற்றுக் கொண்டார். அனிதாவின் அப்பா ஆனந்த் ஒரு பஞ்சாபி. அம்மா சரோஜ் தமிழகத்தைச் சேர்ந்தவர். அனிதாவின் தாய்வழி தாத்தா அண்ணாசாமி சுந்தரம், கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ துறையில் பணிபுரிந்த பெற்றோர்களுக்கு பிறந்த அனிதாவுக்கு இப்போது வயது 58. சட்ட பேராசிரியராக பணியாற்றிய அனிதா, முதல் முறையாக 2019ல் ஓக்வில் தொகுதியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி