உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல் Anna university girl case | Gnanasekaran case | SIT

ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல் Anna university girl case | Gnanasekaran case | SIT

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் வைத்தே 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. பல்கலைக்கு வெளியே பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், 3 பெண் ஐபிஎஸ்கள் தலைமையில் எஸ்ஐடி எனப்படும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஞானசேகரனை எஸ்ஐடி காவலில் எடுத்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவனது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் எஸ்ஐடி ரெய்டும் நடத்தியது. லேப்டாப், செல்போன், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. ஞானசேகரன் திருடி சம்பாதித்த சொத்துகளை முடக்கவும் செய்தனர். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி