/ தினமலர் டிவி
/ பொது
/ பதக்கம் அணிய மறுத்த அமைச்சரின் மகன் | Annamalai | BJP | Minister's Son | Ignored Medal | Puthukottai
பதக்கம் அணிய மறுத்த அமைச்சரின் மகன் | Annamalai | BJP | Minister's Son | Ignored Medal | Puthukottai
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், தமிழ்நாடு துப்பாக்கிச்சுடும் சங்கம், புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் 51வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது. இன்றைய போட்டியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2 நாட்களாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார். தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜா பாலுவும் இந்த துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெற்றதால் அவரை பதக்கம் வாங்க அழைத்தனர்.
ஆக 25, 2025