உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொழிவாரி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் அண்ணாமலை கொதிப்பு! Annamalai | BJP | Stalin | DMK | Language

மொழிவாரி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் அண்ணாமலை கொதிப்பு! Annamalai | BJP | Stalin | DMK | Language

முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் புகார் ஒன்று கூறி இருந்தார். அதில் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற 2014ல் இருந்து சமஸ்கிருத வளர்ச்சிக்கு 2532 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 5 மொழிகளுக்கும் சேர்த்து 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஸ்டாலினின் இந்த புகாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக காட்ட துவங்கி உள்ளனர். இதனால் போலி தமிழ்ப்பற்று நாடகமாடி பிரிவினையை திமுக தூண்ட முயற்சிக்கிறது. சில வாடகை வாயர்களை தூண்டிவிட்டு, மொழிவாரியான நிதி ஒதுக்கீடு குறித்த பொய் பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின். இதற்கு முருக பக்தர்கள் மாநாட்டில் தான் பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !