அண்ணாமலை ஷேர் செய்த பகீர் வீடியோ! | Annamalai | Bus Viral Video
அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற இவர் நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள மரத்தடி நிழலில் நின்றுள்ளார். அப்போது அங்கே இருந்த ஆறு இளைஞர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிவகுமாரிடம் வம்பு இழுத்துள்ளனர். இதை தனது செல்போனில் சிவக்குமார் வீடியோ எடுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிவக்குமாரை தாக்க துவங்கி உள்ளனர். இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் சாலையிலேயே ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவக்குமார் அங்கே வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் ஏறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார்.
ஜூலை 30, 2025