தாங்கள் சம்பாதிக்க கல்வியை பலியிட்ட திமுக | Annamalai | CM stalin | TN schools
பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்து கொண்டிருக்கிறோம். 2023-2024 கல்வியாண்டில் 42.23 சதவீதமாக இருந்த அரசுப்பள்ளி சேர்க்கை விகிதம், 2024 - 2025 கல்வி ஆண்டில் 39.17 சதவீதமாக குறைந்தது. 2025 - 2026 நடப்பு கல்வி ஆண்டில் 37.92 சதவீதமாக மிகவும் குறைந்திருக்கிறது. நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2.39 லட்சமாக உள்ளது. ஆனால், 12,929 தனியார் பள்ளிகளில் 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மடங்குக்கும் அதிகமாக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட பல அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லை.