உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதீனம் ஜாமினுக்கு எதிர்ப்பு; அண்ணாமலை கண்டனம் | annamalai | mk stlain | bjp | Madurai Adheenam

ஆதீனம் ஜாமினுக்கு எதிர்ப்பு; அண்ணாமலை கண்டனம் | annamalai | mk stlain | bjp | Madurai Adheenam

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே கடந்த மே2ல் மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. குறிப்பிட்ட மதத்தினர் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஆதீனம் கூறியிருந்தார். சதி ஏதுவும் நடக்கவில்லை என காவல்துறை விளக்கம் அளித்தது. மத மோதல், பிரிவினையை தூண்டியதாக ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. சென்னை கோர்ட் ஆதீனத்துக்கு முன் ஜாமின் வழங்கிய நிலையில், அதை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் காவல்துறை முறையிட்டது. இதை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவரது அறிக்கை: குடல் இறக்கம் ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை விசாரணை என்ற பெயரில் சுமார் 1 மணி நேரம் துன்புறுத்தி விட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று போலீசார் சொல்வது உள்நோக்கம் கொண்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 10 வயது சிறுமி மீது பாலியல் தாக்குல் நடத்தியவனை கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. திமுகவினரால் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்புசப்பில்லாத காரணத்தை கூறி மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த நாடகமாடி கொண்டு இருக்கிறது திமுக அரசு. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் ஆதீனத்தை துன்புறுத்தும் போக்கை போலீசார் கைவிட வேண்டும். அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனுவை திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

ஜூலை 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
ஆக 01, 2025 06:22

விநாசகாலே விபரீதபுத்தி. மேற்குவங்கத்தில் 35 வருடம் ஆட்சியில் இருந்த கட்சியின் நிலைமையை நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. போலீஸின் தெரிந்தே செய்யும் சட்டவிரோத அத்துமீறல்களுக்கெல்லாம் எதிர்வினை சட்டத்தில் இருக்கவேண்டும். என்னை கொல்ல முயற்சித்தார்கள் என்பதில் என்ன சட்டவிரோதம் இருக்கின்றது. உண்மை இல்லாதபட்சத்தில் தள்ளுபடி செய்ய வேண்டியதுதானே .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை