அண்ணாமலை ஆதரவு போஸ்டர்: பரபரப்பை பற்ற வைத்த கூட்டம்
கோவை மக்களின் அன்பை வென்ற அண்ணாமலை படத்துடன் கோவை நகரின் பல இடங்களில் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? என்ற பாரதியாரின் கவிதை வரிகளுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இப்படிக்கு அண்ணாமலையின் அன்புக்கூட்டம் எனவும் போஸ்டரில் அச்சிட்டுள்ளனர். இது, கோவை மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Annamalai #BJP #AssemblyElections #MahakaviBharati #Poem
நவ 07, 2025