உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வி தொடர்பான தரவுகளை திரிக்கிறது பாஜ: கனிமொழி |annamalai | kanimozhi

கல்வி தொடர்பான தரவுகளை திரிக்கிறது பாஜ: கனிமொழி |annamalai | kanimozhi

மும்மொழி கொள்கை பற்றி பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் 3வது மொழி கற்ற வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒருதலைபட்சமான கொள்கை பின்பற்றுவர்கள் கூறுகிறார்கள். வட மாநிலங்களில் எந்த 3வது மெழி கற்பிக்கப்படுகிறது. அங்கு 2 மொழிகள் கற்றுத்தரபட்டு இருந்தால், நாம் 3வது மொழி கற்ற வேண்டியதன் அவசியம் என்ன? என கேட்டு இருந்தார். ஸ்டாலினுக்கு பதிலளித்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, உங்கள் குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் தனியார் சிபிஎஸ்சி மெட்ரிக் பள்ளிகளில் 3ம் மொழி கற்ப்பிக்கப்படும்போது, அரசு பள்ளிகளுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், 3,5,8 ம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித்திறன் பற்றி சமீபத்திய ASER கிராமப்புற அறிக்கையை படித்து பாருங்கள் என அண்ணாமலை கூறியிருந்தார். இது பற்றி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். பாஜ எப்படி தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும். பாஜ தமது பிரசாரத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களை தேர்ந்தெடுத்து, எண்களை திரிக்கிறது. உங்களின் ASER தரவு எப்படி சூழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து நாங்கள் எங்கள் சொந்த கணக்கெடுப்பை நடத்துகிறோம். தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், உபதேசம் செய்யாமல், SSA நிதியில் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய 2152 கோடி நிதியை விடுக்க மத்திய அரசிடம் சொல்லுங்கள் என கனிமொழி கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இந்திய அரசு வெளியிட்ட தரவு தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக இருந்தால், அதை ஒரு சார்புடையது என்று சொல்வீர்கள்; அதுவே பாராட்டுவதாக இருந்தால் முரசொலி முதல் பக்கத்தில் வெளியிடுவீர்கள். உங்கள் சகோதரர் ஆட்சியில் தமிழக கல்வித்தரம் மோசமடைந்து வருவதை முடிவுகள் சுட்டிக்காட்டும் என நம்புகிறோம். உங்கள் சகோதரரும் மருமகனும் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து வருகின்றனர் நீங்களாவது பதிலளிப்பீர்களா? உங்கள் குடும்பத்தினர், அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகள் உட்பட தனியார் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 3வது மொழி கற்க வாய்ப்பு தரப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் 3ம் மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என்று அண்ணாமலை கேட்டு இருக்கிறார்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை