/ தினமலர் டிவி
/ பொது
/ ராமேஸ்வரம் கோயிலில் நெரிசல்: சன்னியாசி மரணம் annamalai k.bjp minister sekhar babu 2 devotees dies
ராமேஸ்வரம் கோயிலில் நெரிசல்: சன்னியாசி மரணம் annamalai k.bjp minister sekhar babu 2 devotees dies
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக இன்று காலை 6 மணிக்கு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 500க்கு மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். சாமிதரிசனம் செய்ய ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றபோது, ராஜஸ்தானை சேர்ந்த ராஜ் தாஸ் 59 என்ற சன்னியாசி கீழே விழுந்தார். மூர்ச்சையாகிப்போன அவரை கோயில் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செனறனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
மார் 18, 2025