வெறும் கையால் முழம்; ₹2000 கோடி எங்கே? annamalai| mk stalin| free laptop| thangam thennarasu
வெறும் கையால் முழம்; ₹2000 கோடி எங்கே? மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதியே ஒதுக்காமல், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏமாற்றுவதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை: விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வாங்க இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்த திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா? எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு?