திமுக அராஜகத்துக்கு போலீஸ் துணை நிற்க கூடாது: அண்ணாமலை கண்டனம்! Annamalai | BJP | Vellore | DMK
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் விட்டல் குமார். வயது 40. பா.ஜ.வில் ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவராக இருந்தார். கடந்த டிசம்பர் 16ம் தேதி அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். அப்பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் இறந்ததாகவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்களும், பா.ஜ.வினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். பா.ஜ.வினரின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கீழ் ஆலத்தூரைச் சேர்ந்த கமலதாசன் காட்பாடி கோர்ட்டில் சில நாட்களுக்கு முன் சரண் அடைந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணிகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜ நிர்வாகி கொலை வழக்கில் திமுக நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.