பொய், புரட்டு நிறைந்த பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்
தமிழக விவசாய பட்ஜெட் பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: திமுக அரசின் பட்ஜெட் மொத்தமும், பொய், புரட்டுகளும் நிறைந்து இருக்கிறது. 2 நாட்களாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், 2022-23ம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். தமிழகத்தில் சாகுபடி பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2019 -20ம் ஆண்டு சாகுபடி பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழக மக்களை முட்டாள்கள் என்று திமுக நினைத்துக் கொண்டிருப்பது ஏன்? பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரியில் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், அம்புலிமாமா கதைகளை கூறிச் சென்றார்.