உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவிழா மாதிரி இருந்துச்சு: தையூரில் தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் |Apartment Celebration

திருவிழா மாதிரி இருந்துச்சு: தையூரில் தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் |Apartment Celebration

சென்னை, ஓ.எம்.ஆர் ரோடு, தையூரில் உள்ள அக்ஷயா டுடேஅடுக்குமாடி குடியிருப்பில் தினமலர் சார்பில் கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நடந்தது. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விழா துவங்கியது. குட்டிஸ் முதல் பெரியோர் வரை வர களைக்கட்ட துவங்கியது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் அப்பல்லோவின் இலவச மருத்துவ மையம், கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ்கிரீம் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றன. மினி மாரத்தான், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல், கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.

டிச 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை