அரபிக்கடலில் 5 எமன்... பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா kashmir pahalgam attack | ins vikrant | brahmos
காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை குருவி சுடுவது போல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்; அவர்களை பின்னால் இருந்து இயக்கியது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் என்று தீர்க்கமாக நம்பப்படுகிறது. எனவே தான் பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்கும் பாகிஸ்தானை பந்தாட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வர்த்தக உறவு துண்டிப்பு என்று ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை இந்தியா துண்டித்து வருகிறது. இதன் உச்சமாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன. எந்த நேரமும் இந்தியா தங்களை தாக்கும் என்று உச்சக்கட்ட பீதியில் பாகிஸ்தான் உறைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானை அலற விடும் அதிரடி ஆப்ரேஷன்களில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது அரபிக்கடல் ஆப்ரேஷன். அப்படி அரபிக்கடலில் என்ன தான் நடக்கிறது என்பதை பார்க்கலாம்.