மதுக்கொள்கை ஊழல் வழக்கில் காரசார வாதம் aravind kejriwal| Delhi cm| liquor case| CBI
டெல்லி அரசின் மதுக்கொள்கை ஊழல் வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது. இதைதொடர்ந்து CBI சிபிஐயும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரால் வெளியே வர முடியவில்லை. இந்நிலையில், சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் முறையிட்டார். நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா விசாரித்தார். கெஜ்ரிவாலுக்காக வக்கீல் அபிஷே க் மனு சிங்கி வாதிட்டார். ED வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியபோதும், சிபிஐ கைதால் கெஜ்ரிவால் வெளியே வரமுடியவில்லை. கெஜ்ரிவால் எப்படியாவது சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ அவரை கைது செய்து இருக்கிறது. டெல்லி அரசு மதுக்கொள்கையில், கெஜ்ரிவால் மட்டும் கையெழுத்திடவில்லை. அப்போதைய கவர்னர் அனில் பைஜாலும் தான் கையெழுத்திட்டு உள்ளார். அதனால் முன்னாள் கவர்னர், அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட வேண்டும் என வாதிட்டார். சிபிஐ வாதிடும்போது, முழு ஊழலின் சூத்திரதாரர் கெஜ்ரிவால் தான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரது கைது சட்டவிரோதமானது இல்லை என்று விசாரணை கோர்ட் ஏற்கனவே சொல்லியிருக்கிறது.