அதிமுக கவுன்சிலரால் சிக்க போகும் முக்கிய துருப்பு | Armstrong | cooum river
சல்லடை போடப்படும் கூவம் ஆறு! ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருப்பம் சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிமுக நிர்வாகி வக்கீல் மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன், திமுக வழக்கறிஞர் சதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ மகளிர் அணி துணை செயலாளராக இருந்த அஞ்சலை என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் வழக்கில் 16வது நபராக திருவள்ளுர் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைதாகினார். ஏற்கனவே கைதான அருளின் செல்போன் ஹரிதரனிடம் இருந்ததால் அதனடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை கூவம் ஆற்றில் போட்டதாக ஹரிதரன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கூவம் ஆற்றில் மெரினா மீட்பு குழுவினர், ஸ்கூபா குழுவினர் இறங்கி தேடினர்.