உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான காங் மாநில நிர்வாகி | Tamil Nadu Youth Congress | Aswathaman

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான காங் மாநில நிர்வாகி | Tamil Nadu Youth Congress | Aswathaman

சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு சிக்கிய காங்கிரஸ் முக்கிய புள்ளி! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றனர். அதன் பிறகு திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜ, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. கட்சிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் சிக்கினர். இப்போது திருநின்றவூரை சேர்ந்த திமுக வக்கீல் அருள் கொடுத்த தகவலின் பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை