மன்மோகனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்! Arul Anabarasu | Congress | Manmohan Singh | DMK
மன்மோகன் சிங் ஆட்சியில், 10 ஆண்டுகள் பங்கு பெற்ற தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், அவரது மறைவுக்கு, பொது விடுமுறை அறிவிக்காதது, காங்கிரசாருக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கே மனவலியை கொடுத்துள்ளது என, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் அருள் அன்பரசு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு, காங்கிரசுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கும் பேரிழப்பு. அவர் நிதி அமைச்சராக இருந்த போது, தாராள மயமாக்கல் கொள்கையை கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். பிரதமராக, 10 ஆண்டுகள் இருந்த போது, நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் வழி வகுத்தார். முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவர் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிட்டார்; அதற்கு நன்றி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது, அன்றைய அ.தி.மு.க. அரசு, தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்தது. அதை அப்போது அனைவரும் வரவேற்றனர்.