உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி தேர்தலில் பாஜ புதுவித மோசடி செய்வதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு! Arvind Kejriwa |BJP

டில்லி தேர்தலில் பாஜ புதுவித மோசடி செய்வதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு! Arvind Kejriwa |BJP

டில்லியில் வரும் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சித் தலைவர்களுமே விறுவிறுப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் பாஜ புது வகையான மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: டில்லி தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜ செயல்படுகிறது. இம்முறை புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர். டில்லி மாநகரின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாய் பணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் கொடுக்கும் அவர்கள், வீட்டில் இருந்தபடியே நீங்கள் ஓட்டு போடலாம் என்பார்கள். அதற்காக தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி, உங்கள் விரலில் மை வைத்துவிட்டு சென்றுவிடுவர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ