அசாமுக்கு வளர்ச்சி தந்தது பிரதமர் மோடி என புகழாரம் Assam Congress Amit Sha
2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அசாம் சென்றார். இன்று கவுகாத்தியில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது அசாமில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த பிறகு, தேர்தல் முடிவுகள் என்னவாக வரப் போகின்றன என்பது குறித்து மத்திய அரசும், காங்கிரசும் யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் மக்கள் தெளிவான தீர்ப்பளித்தனர். இனி வரப் போகும் தேர்தல்களில் பைனாகுலர் வைத்து தேடினாலும் நீங்கள் காங்கிரசை கண்டுபிடிக்க முடியாது.
ஆக 29, 2025