சாலை விபத்து இரு சமூக வன்முறையான பயங்கரம்: அசாமில் உச்ச பதற்றம் | Assam Violence
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் கவுரிநகர்-மன்சிங் சாலையில் போடோ இனத்தைச் சேர்ந்த 3 பேர் காரில் சென்றனர். அவர்களை கண்ட உள்ளூர் ஆதிவாசி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள கால்நடைகளை திருடி விட்டு தப்பி செல்வதாக நினைத்தனர். ஊர் மக்கள் திரண்டு காரை துரத்தி சென்றனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இரண்டு பழங்குடியின இளைஞர்கள் மீது கார் மோதியது. விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள், காரில் இருந்தவர்களைத் தாக்கியதுடன் காரையும் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தத் தாக்குதலில் சிக்க்னா ஜ்வலா பிஸ்மித் என்பவர் இறந்தார். மற்றவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இரு சமூகத்தினரும் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்கள் எரிக்கப்பட்டன, சில வீடுகள் மற்றும் ஒரு அலுவலகக் கட்டடம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஒரு போலீஸ் ஸ்டேஷனும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவம், போடோ மற்றும் ஆதிவாசி மக்கள் இடையேயான வன்முறையாக மாறியது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க கோக்ரஜார் மற்றும் சிராங் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோக்ரஜார் மாவட்டம் முழுவதும் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்காக அதி விரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இணைய வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மக்கள் அமைதி காக்குமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். #Assam #Kokrajhar #Chirang #AssamNews #InternetShutdown #NorthEastIndia #ManipurClashes #LawAndOrder #HimantaBiswaSarma #BreakingNewsIndia #Bodo #KokrajharViolence #PeaceInAssam #SecurityForces #NationalNews