தொழிலதிபர் ஆகும் ஆசையில் மொத்தத்தையும் இழந்த தம்பதி | AstrologyScam |Chennai
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர்கள் கவிதா- மணிகண்டன் தம்பதி. ஐடி ஊழியர்கள். கடந்த 2022 மே மாதம் ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியில் உள்ள ஜோதிடர் வெங்கடசுரேஷ் வீட்டுக்கு சென்றனர். ஜாதக கட்டங்களை ஆராய்ந்த ஜோதிடர், நீங்க இரண்டுபேரும் சேர்ந்து தொழில் செய்தால் பணம் கொட்டும். இனிமே உங்களுக்கு நல்ல காலம்தான். ஜம்மென்று வாழ்வீர்கள்.என கூறியுள்ளார். ஜோதிடரின் வார்த்தைகளால் தம்பதி மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது ஜோதிடர், எனக்கு தெரிந்த ஒருவருக்கு 2 ஆண்டுக்கு முன்பு பெட்ரோல் பங்க் தொடங்க உரிமம் வாங்கி கொடுத்தேன். இப்போது அவர் ஓஹோவென இருக்கிறார். உங்களுக்கும் இடம் இருந்தால் பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கி தருவேன் என்றார். உடனே தம்பதி, எங்களுக்கு திருவண்ணாமலை வேட்டவலத்தில் 65 சென்ட் இடம் இருக்கிறது என ஆர்வத்துடன் கூறியுள்ளனர். அப்புறம் என்ன.. அங்கேயே சூப்பரா பெட்ரோல் பங்க் வைத்துவிடலாமே என ஜோதிடர் ஐடியா தந்தார். தம்பதியும் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதித்தனர். இதைடுத்து, முடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவரின் வீட்டுக்கு தம்பதியை அழைத்த சென்ற ஜோதிடர் வெங்கட சுரேஷ், அவரை அறிமுகம் செய்து வைத்தார். விஜயபாஸ்கரின் தந்தை டெல்லியில் RAW பிரிவில் பணிபுரிகிறார். பெரிய பெரிய அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் அதிக நெருக்கம் உள்ளவர். 85 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் பெட்ரோல் பங்க் வைக்க லைசன்ஸ் வாங்கி கொடுத்துவிடுவார். அப்புறம் நீங்க எங்கேயோ போய்விடுவீர்கள் என ஜோதிடர் கூறியிருக்கிறார். கவிதா-மணிகண்டன் தம்பதிக்கு நம்பிக்கை இன்னும் அதிகம் ஆனது. தங்களது வங்கி கணக்கில் இருந்து 6 தவணைகளில் மொத்தம் 50 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர்.