உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அட்டாரி-வாகா எல்லையில் களைகட்டிய 80வது சுதந்திர தினவிழா

அட்டாரி-வாகா எல்லையில் களைகட்டிய 80வது சுதந்திர தினவிழா

நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலாமக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல, முதல்வர் விஜய் உள்பட அந்தந்த மாநில முதல்வர்களும் மூவர்ணக் கொடியை ஏற்றி, மரியாதை செய்தனர் பஞ்சாப்பில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லயில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எல்லை பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து, முப்படை வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு, தேசிய கொடியை இறக்கினர். இதனை உற்சாகமாக பார்த்து ரசித்த மக்கள், வந்தே மாதரம் என தேசபக்தி முழங்க கோஷம் எழுப்பினர். #IndependenceDay #IndependenceDay2026 #80thIndependenceDay #VandeMataram #AttariWagahBorder #WagahBorder #AttariBorder #IndiaPakistanBorder #IndianArmy #BSF #BorderSecurityForce #IndianSoldiers #IndependenceDayCelebration #RepublicOfIndia #India #IndianFlag #NationalFlag #Patriotic #DeshBhakti #VandeMataram #TamilNews #TamilNewsToday #Dinamalar #DinamalarNews #BreakingNews

ஆக 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை