உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவினாசி கோயிலில் பக்தர்கள், ஊழியர்கள் வாக்குவாதம்

அவினாசி கோயிலில் பக்தர்கள், ஊழியர்கள் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள், கோயில் வளாகத்தில் ராஜகோபுரம் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கோயில் காவலாளி கார்த்திகேயன், இங்கு போட்டோ எடுக்கக்கூடாது கிளம்புங்கள் என ஒருமையில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பெண் பக்தர்களுக்கும் கோயில் காவலாளி கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த கோயில் மணியக்காரர் சங்கரும் கோயில் வளாகத்தில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை என பக்தர்களிடம் கூறினார்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை