சுற்றுலாத்தலம் ஆனதால் அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு | Ayodhya | Ram temple | tax
₹400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில்! அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என 2019ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. 2020ல் ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை கோயில் கட்டுமான பணிகளை துவக்கியது. பல்வேறு தரப்பினர் நிதி அளித்தனர். கடந்தாண்டு ஜனவரியில் கோயில் திறந்தது முதல் சுற்றுலா வளர்ச்சி, பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அறக்கட்டளைக்கு அதிக வருவாய் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சுமார் 400 கோடி ரூபாயை வரியாக செலுத்தி இருக்கிறது. இதில் 270 கோடி ஜிஎஸ்டியாக செலுத்தப்பட்டிருக்கிறது. 130 கோடி மற்ற வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டிருக்கிறது. அயோத்தி முக்கியமான மத சுற்றுலா மையமாக மாறி இருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு இதனால் வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. மகாகும்ப மேளா சமயத்தில் மட்டும் அயோத்திக்கு 1.2 கோடி பக்தர்கள் வந்தனர் என ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.