/ தினமலர் டிவி
/ பொது
/ ஐயனாரப்பன் கோயிலில் தவெகவினர் வேண்டுதல் actor vijay| TVK | ilaya thalapathi
ஐயனாரப்பன் கோயிலில் தவெகவினர் வேண்டுதல் actor vijay| TVK | ilaya thalapathi
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தவெக மாநாடு நடைபெறும் நாட்களில் மழை பெய்தால் அனைத்தும் பாழாகிவிடுமே என கட்சியினர், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மாநாடு நடைபெறும் நாட்களில் மழை பெய்ய கூடாது என்பதற்காக, வி.சாலை கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன் கோயிலில் யாகம் வளர்த்து வழிபட்டனர். 2026 தேர்தலில் ஜெயித்து விஜய் முதல்வர் ஆக வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
அக் 24, 2024