தடுப்பதற்கு யாரும் இல்லாமல் தலை விரித்தாடுகிறது வன்முறை |Sheikh Hasina| Hindus |Bangladesh Row
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின் அரசியல் குழப்பம் அதிகரித்து மதவாதம் தலைவிரித்தாடுகிறது.
குறிப்பாக நம் நாட்டுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதுடன், இந்துக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
பிப்ரவரியில் அங்கு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்ற வாரம் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
வங்கதேசத்தின் பல நகரங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன.
இதன் ஒரு பகுதியாக மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
அவருடைய உடலை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்தனர்.
பல இடங்களில் இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சாட்டோகிராம் மாவட்டத்தில் 5 நாட்களுக்குள் 7 இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிரோஜ்பூர் பகுதியில் சஹா என்ற இந்துவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்டது.
அருகே இருந்த மேலும் 4 வீடுகளிலும் தீப்பற்றியது.