மக்கள் அயர்ந்து தூங்கும்போது தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி Bangladesh violenct Former president Ab
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. ேஷக் ஹசீனா அரசு அறிவித்த இடஒதுக்கீடுக்கு எதிராக துவங்கிய மாணவர் போராட்டம் பயங்கர கலவரத்தில் முடிந்தது. பிரதமர் பதவியை தூக்கி எறிந்து விட்டு ேஷக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது. மாணவர் போராட்டத்தை நசுக்க துப்பாக்கிச் சூடு நடத்தி, பலரை கொன்றதாக ேஷக் ஹசீனா மீது வங்கதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ேஷக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நிர்வாகிகள் மீதும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் ஹசீனாவின் அரசில் முக்கிய பதவி வகித்த பலர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர்.