வங்கதேசத்தில் அடுத்து நடக்க போவது என்ன? | Bangladesh|ICT Judgement |tribunal Court |Sheikh Hasina
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்தார். நிலைமை மோசமானதை தொடர்ந்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு பொறுப்பேற்றுள்ளது. போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலையானதற்கு ஷேக் ஹசீனாவின் அடக்கு முறையே காரணம் என கூறி அந்நாட்டு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் பெரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை கண்டதும் சுட இடைக்கால அரசு உத்தரவிட்டு உள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கியிருந்தாலும் இந்த உத்தரவு உடனடியாக அமலாகாது என கூறப்படுகிறது. இந்த உத்தரவை எதிர்த்து ஹசீனா அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. வழக்கில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டாலும் மரண தண்டனையை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ வங்கதேச அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இந்த சூழலில் வங்கதேச இடைக்கால அரசு ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. ஹசீனா விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த முடிவையும் அறிவி