சென்னை தி நகர் வங்கியில் நடந்த பகீர் சம்பவம் | Bank | Bank Employee Hospital
சென்னை தி நகரில் உள்ள பர்க்கிட் ரோட்டில் தனியார் வங்கி கிளை செயல்படுகிறது. காலை வழக்கம் போல வங்கி பணிகள் தொடங்கிய நிலையில் ஆசாமி ஒருவர் வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்துள்ளார். மேனேஜர் தினேஷ் அருகில் சென்ற அவர் திடீரென மறைத்து வைத்திருந்தக் அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார். தினேஷை வெட்டியபோது உன்னால தான் டா என் வேல போச்சு என கத்தியுள்ளார் அந்த ஆசாமி. காதில் வெட்டுக்காயம் அடைந்து வலி தாங்க முடியாமல் தினேஷ் கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரது காதில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ஆசாமியை வங்கி ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தினேஷ் அருகில் இருந்த ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.